சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..............

Monday, December 31, 2007

கவிதையாகுமோ இவைகளும்

தயங்கி தயங்கி பேசுகிறாய் நீ
உன் தயக்கம் தவிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதை என்கிறேன் நான்
பிறகு தயக்கங்கள்?
நீ கவிதைகளில் பேசி முடித்த பின்தான் தெரிந்தது
ஒவ்வொன்றும் காப்பியம் என்று.

திருமணங்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும்
குழந்தை திருமணமும் கூடாது
அடியே எப்படி செய்வேன் இரண்டையும்
உனை மணந்து

நான் பார்க்கும் அழகெல்லாம் நீ என்றேன்
ஒரு கணம் எனது காதலை உயர்த்திப் பிடித்ததாய் நினைத்திருந்தேன்
ஒரு சொட்டு க‌ண்ணீர் விட்டாய் நீ
அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்த‌து என் காத‌ல்

உனை பாரட்ட விரும்பவில்லை
நிலா என்றும் சூரியன் என்றும்
நீ ஒரு காட்டு இருட்டு
இனி ஒருவரும் காணாதபடி
உன்னுள் கரைவது எப்படி கற்றுக் கொடு
ஞாயிரின் ஆயுள் நாலரை பில்லியன் ஆண்டுகள் மட்டுமே
இருந்துவிடவே ஆசை எனக்கும் இருள் இருக்கும்வ‌ரை